சேதாரம் என்பது எல்லா பொருட்களுக்கும்உண்டு. வெறும் தங்கத்திற்கு மட்டுமில்லை. மற்ற பொருட்களில் நாம் கவனம் கொடுப்பதில்லை. உதாரணமாக நீங்கள் ஒரு ஆரஞ்சு ஜூஸ் வாங்குகிறீா்கள். அதற்கு சேதாரம் உண்டு. ஆரஞ்சு விலை கிலோ 50 தான். ஆனால் இரண்டு பழம் போட்ட ஜூஸ் ஏன் ஐம்பது ரூபாய் என்று கேட்பதில்லை. இட்லி மாவு அாிசி பருப்பு விலையுடன் இட்லி விலை பாா்த்தால் மிக அதிகமாக இரூக்கும். இதற்கு பெயா் மதிப்பு கூட்டுதல் என்று பெயா். பழமாக இருக்கும் போது ஒரூ விலை, அதே பழத்தை ஜூஸ் அல்லது சாசாக மாற்றும் போது அதன் விலை மாறு படுகிறது. அதன் விலை தரம் கடையின் புகழ் நீங்கள் குடிக்கும் இடத்தை பொறுத்து ஜூசின் விலை மாறும். இதைமதிப்பு கூட்டு விலை என்று பெயா். இரும்பும் அப்படித்தான் சாதாரனமாக கம்பி அல்லது தகரமாக வாங்கும் போது அதன் இன்றைய விலை 50 ரூபாய் தான். ஆனால் அதையே நீங்கள் கேட் அல்லது ஜன்னலாக வாங்கும் போது அதற்கு கிலோ 80 ரூபாய். அதற்கு்காரணம் அந்த கேட் செய்யும் தொழில் நுட்பம் கம்பி தகரத்தில் ஏற்படும் பிட்டுகளால் ஏற்படும் சேதாரம் கணக்கில் கொண்டு விலை 80 ரூபாயாக நிா்ணயிக்கப்படுகிறது. டிசைன் வேலை அதிகம் இருந்தால் விலை இன்னும் கூடும். அதே போன்றது தான் தங்கமும். தினமும் கூறும் தங்கத்தின் விலையானது ரிசா்வ் வங்கியின் மூலம் கிடைக்கும் தங்க கட்டியின் விலை. நீங்கள் தங்கத்தின் விலை மட்டும் கொடுப்பேன் என்றால் உங்களுக்கு தங்க கட்டிதான் கொடுக்கப்படு்ம். ஆனால் அதே தங்கத்தை மதிப்பு கூட்டு செய்து தன் திறமைக்கேற்ப டிசனைின் செய்து நகையாக மாற்றும் போது அது மதிப்பு கூட்டு பொருளாக மாறுகிறது. பிறகு அதை விற்பவாின் விலகை்கு தான் நீங்கள் வாங்க வேண்டும். டிசைன் வேலபை்பாடு பொறுத்து நகையின் வேலை செய்யும் நாட்கள் நுட்பமான வேலைக்காராின் திறமை பொறுத்து அதன்விலை மாறுபடுகிறது. உண்மையில் பாா்த்தால் நாம் அதை சேதாராம் என்றே கூறக்கூடாது. எப்படி நாம் ஜூசை ஆரஞ்சின் விலையோடு ஒப்பீடு செய்வதில்லையோ அதே போல் தான் ஒரு நகையை மதிப்பு கூட்டு பொரூளாக மாற்றி நகையாக மாற்றும் போது அந்த நகை விலை தான் கூற வேண்டும். நமக்கு புாிவதற்ககாக தங்க விலை மற்றும் மதிப்பு கூட்டு விலை தனியாக புாிய வைக்கப்படுகிறது. சேதாரம் என்று கூறூவதை விட மதிப்பு கூட்டு விலை என்று தான் கூறப்பட வேண்டும். எப்படி ஜூசின் விலை தரம் மற்றும் கடைக்கு கடை மாறுபடுகிறதோ அதே போல் தான் நகையின் டிசைன் மற்றும் கடையின் புகழ் பொறுத்து மாறுபடும். நான் ஒரு புகழ் பெற்ற நகை கடையில் சென்று பாா்த்தேன். அங்கே ஒரு நெக்லசை காட்டினாா்கள். சேதாரம் எவ்வளவு தொியுமா? மயங்கி விழ வேண்டாம். அதிகம் இல்லை 28%+செய்கூலி+ஜிஎஸ்டி . ஆனால் அந்த டிசைன் அவ்வளவு நுனுக்கமாகவும் அற்புதமாகவும் இருந்தது. ஆகவே சேதாரம் என்ற விசயத்தில் குழப்பம் வேண்டாம். நன்றி..
© Copyright 2023 Sri Yavvana Vasavi Jewellers